09/12/2022
மாண்டாஸ் புயல் நெருங்கி வரும் இந்த வேலையில் கடலூர் சிதம்பரம் நாகைப்பட்டினம் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மற்றும் இதர வட மாவட்டங்களைச் சேர்ந்த என் உறவுகளுக்கும் தொழில் சொந்தங்களுக்கும் வணக்கம். நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க அரசு வலியுறுத்தி வருகிறது ஒவ்வொரு வருடமும் தமிழ்நாட்டில் புயல் என்றால் பாதிக்கப்படுவது உங்கள் மாவட்டத்தைச் சார்ந்த என் உறவுகளும் சொந்தங்களும் தான் எனவே தாங்கள் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் மிகுந்த பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த இரண்டு நாட்கள் நாம் பாதுகாப்பாக இருந்தால் பல இழப்புகளை தவிர்க்கலாம் என்பது என்னுடைய எண்ணம்.மேலும்அதிக சேதாரம் ஏற்படாமல் இருக்க தென் மாவட்டங்களைச் சார்ந்த உறவுகள் மற்றும் என் தொழில் சொந்தங்கள் அனைவரும் அவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்வோம்.🙏🙏🙏
நியூ ஜெயம் ஜோசப் திண்டுக்கல்